0 0
Read Time:3 Minute, 23 Second
%25E0%25AE%259A%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2589%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D
சசிகலா நோற்று வந்த காரில் அதிமுக கொடி இருந்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த காரின் பின்னால் ஒளிந்திருக்கும் ராசி குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது.
பெங்களூரு பரப்பன அகரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கு காரணமாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த 27-ஆம் தேதி விடுதலையாக வேண்டிய சசிகலா, கொரோனா மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல்நிலை சீரானதும், கொரோனா குணமடைந்ததும், அவர் உடனடியாக நோற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காரில் புறப்பட்டு வந்தார்.
அவர் வந்த காரில் அதிமுக கொடி இருந்தது. அதிமுக சசிகலாவை முற்றிலும் ஒதுக்கியிருக்கும் நிலையில், அவர் காரில் அதிமுக கொடி இருப்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் தெரிந்தது.
இந்நிலையில், அந்த காருக்கு பின்னால் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறதாம், சசிகலா இந்த காரில் வருவதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம்.
இது ஜெயலலிதா பயன்படுத்தி வந்த கார், அதுமட்டுமின்றி காரின் எண் TN 09 3737 என்பதாகும்.
இந்த கார் எண்ணின் கூட்டுத் தொகை 2 ஆகும். இதிலும் ஒரு முக்கியமான ரகசியம் உள்ளதாம், அதாவது ஜெயலலிதாவுக்கு ஒரு காலத்தில் 9, 5, 7 ஆகிய எண்கள்தான் ராசி எண்ணாக இருந்தது.
கூட்டுத் தொகை அது போல வருவதாக பார்த்துக் கொள்வார். அதே போல 2 என்ற எண் சசிகலாவுக்கு ராசியான எண்ணாகும். ஜெயலலிதாவும் இதையே ராசி எண்ணாகவும் தனது கடைசி நாட்களில் வைத்துக் கொண்டார்.
%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D
காரணம் கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தேதி 11 ஆகும். அதேபோல மே 11-ஆம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதால் 11 அல்லது 2 என்ற எண் அவருக்கு ராசியாக மாறியது.
சசிகலாவும் இதையே தனது ராசி எண்ணாக பின்னாளில் மாற்றிக் கொண்டார். இந்தக் காரைத்தான் நோற்று சசிகலாவும் மருத்துவமனையிலிருந்து வந்தபோது பயன்படுத்தியுள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here